காதலர் தினத்தில் பாதுகாப்புக் கோரி தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!
உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14, காதலர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு பெற்றோர்கள் மிரட்டுவதாகக் கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.சேலம் செட்டிசாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், பரிதா தம்பதியினர். இவர்களின் மகன் கிஷோர்குமார், வயது 22. கிஷோர்குமார் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் - கனிமொழி தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் வைஷ்ணவி, வயது 19. வைஷ்ணவி ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். இருவருக்கும் காதல் மலர்ந்ததால் கல்யாணம் செய்துகொண்டு பாதுகாப்புக் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
இதுபற்றி கிஷோர்குமரிடம் கேட்டபோது, ``நாங்கள் ரெண்டு பேரும் ஒரு வருடத்துக்கு முன்பு ஃபேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆகிக் காதலிக்கத் தொடங்கினோம். இருவரும் கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்தோம். நான் சேலத்திலும் அவங்க ரஷியாவிலும் இருந்ததால் எங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாது. அவங்க லீவுக்கு சென்னைக்கு வந்தபோது நாங்கள் காதலிப்பது அவங்க அப்பா, அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. அவருக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்து சொந்தத்திலேயே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்.
அதையடுத்து, அவங்க என் கூட வந்துட்டாங்க. நாங்கள் ரெண்டு பேரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். பெண்ணின் அப்பாவும் பெரியப்பாவும் எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். அவர்களின் அடியாட்கள் எங்கள் வீட்டைத் தேடி வந்து விட்டார்கள். அதனால் சேலம் கலெக்டர் மேடத்தைச் சந்தித்து பாதுகாப்புக் கேட்பதற்காக வந்திருக்கிறோம்'' என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
#lovers #valentine's #dayloveajith #shalini #love #storylove #failure

கருத்துகள் இல்லை