யுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகை - கிழக்கு ஆளுனர்!

யுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகை காட்டப்படும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வன பரிபாலனத் திணைக்களக் காணி தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கும் ஜனாதிபதி செயலணி சம்பந்தமான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்குத் தேவையான காணிகளை வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல் பொருள் திணைக்களம் ஆகியன சில காணிகளை வர்த்தமானி பிரகடனம மூலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அந்தப்பிரதேச மக்கள் கால் நடைகள் இறப்பு, இருப்பிடப்பிரச்சினை, மேய்ச்சல் தரைப்பிரச்சினை, மீள்குடியேற்றப்பிரச்சினை, விவசாயத்துக்கான காணிகள் இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.
ஆகவே இன்று இவைகள் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலக மட்டத்தில் அறிக்கைகளைப் பெற்று, மாவட்ட செயலகத்தின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தேசிய செயலணிக்கு சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல்தரை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளை உடனடியாக வன பரிபாலன திணைக்களத்தினர் நேரடியான கள விஜயங்களை மேற்கொண்டு ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலங்களில் குடியேறிய மக்களுக்கு சலுகை வழங்கப்படும் அவர்களுக்கான காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கப்பாலேயே ஏனைய தேவைகளுக்கு காணிகளைப் பயன்படுத்தும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எம்.அமீர்அலி, அலிசாஹிர் மௌலானா, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ:சினி முகுந்தன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.