அமெரிக்க வர்த்தக தூதுவர்கள் சீன ஜனாதிபதியை சந்திக்க தயாராகியுள்ளனர்!

அமெரிக்காவின் வர்த்தக தூதுவர்கள் சீனாவின் வர்த்தக துறை சார்ந்த பிரமுகர்களை சந்திப்பதற்காக தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் ஸ்டீவன் நுச்சின் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரொபர்ட் லைட்திஸெர் ஆகியோர் தமது சீன பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்தில் உள்ள உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் இருவரும் இன்று பிற்பகலில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்னை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிவரை நீடிப்பதற்கு எந்தவித தீர்மானமும் இல்லை என்று வௌ்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குடலோவ் நேற்று தெரிவித்திருந்தார்.
உலக வளர்ச்சிக் கணிப்பை மும்மடங்காகக் கொண்ட ஒரு வர்த்தகப் போரை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரண்டு நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்தநிலையில் முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 3 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், பிரதிநிதிகள் தரப்பிலான பேச்சுக்களும், தொழிநுட்ப ரீதியான தகவல் பறிமாற்றங்களும் இடம்பெறவுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.