சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி காந்தியவாதி அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அந்தப் போராட்டத்தில் மராட்டிய அரசு விவசாயிகளின் பிரச்னையை தீர்க்கவும் லோக் ஆயுக்தாவை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.


அதன்பின் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நடத்திய பேச்சுவார்த்தையைடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். அண்மையில் அவர் நடத்திய உண்ணா விரத போராட்டத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது.

இந்தநிலையில், அவரது மூளைக்கு ரத்தம் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்னா ஹசாரேவிற்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.