இணையத்தில் வெளியான சோனி நிறுவத்தின் XA3 பிளஸ் ஸ்மார்ட்போன்!
சோனி நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் சில ஸ்மார்ட்போன்களில் 21:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சோனி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எக்ஸ்பீரியா XA3 பிளஸ் இருக்கிறது. தற்சமயம் எக்ஸ்பீரியா XA3 பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் XA3 ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அளவுகளை தவிர இரு ஸ்மார்ட்போன்களை பார்க்க எவ்வித வேறுபாடும் காணப்படவில்லை. எக்ஸ்பீரியா XA3 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 21:9 ரக டிஸ்ப்ளேவும் எக்ஸ்பீரியா XA3 மாடலில் 5.9 இன்ச் டிஸ்ப்ளேவும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே அளவு உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இவற்றில் 21:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் நாட்ச் வடிவமைப்பு மற்றும் செல்ஃபி கேமராவிற்கு துளையிடப்பட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக ஸ்மார்ட்போனின் மேல்பக்க பெசல் சற்று அகலமாகவும், கீழ்புறம் பெசல் எதுவும் இருக்காது என தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஃபுல் ஹெச்.டி. 1080 பிக்சல் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டனின் இடையே பொருத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் கிடைக்கும்.,ஸ்மார்ட்போனின் கீழ் ஸ்பீக்கர் கிரில்கள், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை