விஜய் பிறவி நடனக்கலைஞர்” தளபதியை பாராட்டிய தல அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் படமும் போட்டிப் போட்டுக்கொண்டு திரையரங்குகளை நிரப்பும் அளவிற்கு இருவருக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.


விஜய்- அஜித் இருவரையும் எதிர் எதிர் துரவத்தில் வைத்து அவர்களது ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வந்தாலும் இயல்பு வாழ்க்கையில் அவர்கள் இருவரும் ஆகச்சிறந்த நண்பர்களாகவே இதுநாள் வரை இருந்து வருகிறார்கள்.

அவ்வப்போது அஜித்தைப்பற்றி விஜய்யும், விஜய்யைப் பற்றி அஜித்தும் பாராட்டிக்கொள்வது என்பது நடந்தேறும் நிகழ்வுகளில் ஒன்று. சமீபத்தில் நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘'நான் சமீபத்தில் ‘விஸ்வாசம்‘ படப்பிடிப்பின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு பாராட்டிக் கொள்கிறார்கள்'. நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும்.' என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.