புல்வாமா தாக்குதலை எதிர்க்கும் வகையில் கோவா வாழ் காஷ்மீரிகளின் முன்னெடுப்பு!

காஷ்மிரின் புல்வாமாவில் நடத்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பல நாடுகள் இந்தியாவிற்கு அனுதாபமும் பாகிஸ்தானுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

இறந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பல மாநில அரசுகளும் இழப்பீடு தொகை அறிவித்துள்ளன.
இந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவாவில் வாழும் காஷ்மீர்வாசிகள், தங்களின் கடைகளை நேற்று அடைத்து எதிர்ப்பை வெளிகாட்டினர்.
தெற்கு கோவாவில் உள்ள கனகோனா என்னும் இடத்தில் 250 காஷ்மீர் மாநில குடிமக்கள், தங்களின் கடைகளை நேற்று மட்டும் அடைத்தனர்.
‘நாங்கள் ஒரு நாள் சம்பாதிக்காமல் இருப்பது, இராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நிகராகாது. ஆனால் எங்களால் முடித்தது இது மட்டும்தான்' என கனகோனாவில் கடை வைத்திருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த ஷபிர் அகமது தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெ-இ-எம் என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பெற்றுள்ளது. இந்தியா இராணுவம் இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜெ-இ-எம் அமைப்பின் முக்கிய தளபதியான கம்ரானை கொன்றது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.