"அகரன்" பாடல் விரைவில்..!!

தாய்மொழி தமிழுக்காய் நான் எழுதி விரைவில் வெளியாகவுள்ள #அகரன்  பாடலின் வரிகள் உங்கள் பார்வைக்கு.



பல்லவி

உலகாளும் ஒற்றை மொழியே செம் மொழியே
உயிராக உன்னை நினைத்தோம் தமிழ் மொழியே

கலங்காதே இரட்டை விழியே கரு விழியே
தமிழ் தானே உன்னை செதுக்கும் ஓர் உளியே..

அனு பல்லவி

பாரெங்கும் எம் புகழ் வீசும்
நாடெங்கும் எம் மொழி பேசும்
நாவெங்கும் தேன் அள்ளி பூசும் தமிழ் மொழி தானே தமிழ் மொழி தானே

தாய் மண்ணும் தாலாட்டு பாடும்
தமிழினம் ஒன்றென கூடும்
தமிழால் தரணியை ஆளும் காலம் இது தானே இதுதானே

சரணம்

தமிழன்னை உந்தன் மடி மீதினிலே
மழலை நான் பாடும் மொழி உலகின் காதினிலே
உலகத்தின் மொழிக்கெல்லாம் தாய் மொழியே
தலைமுறை தாண்டி நீ வாழியவே

அடைக்கலம் நீயே தந்தாய்
அடையாளம் நீயாய் நின்றாய்
வருங்காலம் ஆளும் வர்க்கம்
உன்னாலே வாழ்வே சொர்க்கம்

பாலாமை போலெங்கள் மனமாகும்
பேராண்மை என்பதெம் குணமாகும்
உலகத்தின் முதற்குடியெம் இனமாகும்.
அடுத்த தலைமுறையில் எம் தமிழாளும்.

சரணம்

தேனென எந்தன் மொழி பூவினிலே
தித்திக்கும் சொற்கள்  உலகின் நாவினிலே
அகமெங்கும் காதல் தந்த மொழியே
புறமெங்கும் வெற்றி கொண்ட வீர  மொழியே

உறவுக்கு பெயர்கள் தந்தாய்
உயிருக்குள் உணர்வாய் நின்றாய்
விதையாகி சிதறிக் கிடந்தோம்
விழுதாக இணைய பணித்தாய்.

பாலாமை போலெங்கள் மனமாகும்
பேராண்மை என்பதெம் குணமாகும்
உலகத்தின் முதற்குடியெம் இனமாகும்.
அடுத்த தலைமுறையில் எம் தமிழாளும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.