காணாமல் ஆக்கப்பட்டவளின் சப்பாத்து.!!

அவன் அந்தப் பாதுகையை கட்டியணைத்தான்
திவலைகள் 2009 ஐ எழுத இருதயம் கழன்று விழுந்தது...!

அவன் முதல் வேதனத்தில்
சனித்தது அந்தச் சப்பாத்து

மறந்திருப்பாள் அவன் தங்கச்சி
காலம் அவள் நினைவுகளுக்காய்
பத்திரப்படுத்தியிருக்கலாம்

காணாமல் ஆக்கப்பட்டவளின்
சப்பாத்து இன்றுவரை நனைந்துகொண்டேயிருக்கிறது

அந்த அண்ணனின் கண்ணீரால்
அவள் காணாமல் ஆக்கப்பட்ட
செய்தி

அவர்களின்  கரி நாவில் மறப்போம் மன்னிப்போமாக
வேறு சிலரின் கண்களில் காணாமலே போகட்டுமாக
இன்னும் சிலருக்கு சிரிப்புச் செய்தியாக

அந்தச் சப்பாத்தில் கருக்கொள்ளும்
நாளைய அக்கினி மேகங்களின் புரட்சி
என்பதை அறிந்திருந்து

அவனின் திவலையால்
வளரும் தமிழீழ நாணல் யாவும்..

(-த.செல்வா-)
24.02.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.