தமிழ் எங்கள் உயிருக்கு மேல்..!


நறுக்கென்று பா படைக்கும்
பாவலன்!

அடக்குமுறைக்கு
எதிராக
தீந்தமிழ் தொடுத்த
தீரன்!

தமிழ் செருக்கு
சிரத்தில் இருக்கும்
அதனால் பாவேந்தர்
பாட்டில் கனல் தெறிக்கும்.

யாருக்கும் நெளியாது
வழியாது
நேரிடை பேசி
கூரியசொல் வீச்சில்
கூன் நிமிர்த்தியவர்.

சாதித்தீ எரித்து
சாதனைக்கவியாய்
சமத்துவம் சமைத்து
மூடநம்பிக்கையை
முளையோடு அழிப்பதில்
முழுமூச்சுடன் திகழ்ந்தார்.

தமிழ் மொழியின்
காவலனாய்
புதுவையில் மலர்ந்தார்
தமிழ்  புலமையில்
தரணியை வென்று
மொழி அறிஞனாய்
மனங்களை வென்றார்.

இளங்கலை பட்டத்தை
இரண்டே ஆண்டுகளில்
முடித்தார்
முறுக்கு மீசை பாரதியின்
கவிகள் கவர்ந்ததால்
பாரதிதாசன் என்று
தனக்குத் பெயர் சூட்டி
பாவேந்தராய்
பாக்களில் வாழ்கிறார்.

முத்தமிழ் வேந்தனாய்
அடுக்கடுக்காய்
பட்டங்கள் பெற்று
வித்தகனாய்
தமிழுக்கு அமுதென்று
பெயர் வைத்து
அந்த தமிழ் எங்கள்
உயிருக்கு மேல்
என்றார்.

தூயவன

No comments

Powered by Blogger.