கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடடிவக்கைக்கு கடிவாளம் போடும் வகையில், இந்தியாவுக்கு ஆதரவாக பாரீசில் நிதி நடவடிக்கை பணிக் கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.


புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக பாகிஸ்தானுக்கு கொடுத்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது.
அதுதவிர, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிற எப்ஏடிஎப் என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவை இந்தியா நாடியுள்ளது. அந்த குழுவிடம் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்குமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது.
காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய கார் குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறி ஆவணத்தை எப்ஏடிஎப் என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவிடம் இந்தியா அளித்துள்ளது.
ஒரு வார காலமாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை மீது இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அந்த முடிவை இந்தியா மட்டுமல்ல... உலகநாடுகளும் உற்று நோக்குகின்றன.
சர்வதேச அளவில் Financial Action Task Force (FATF) என்ற அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. தீவிரவாதத்தை எந்த நாடு ஆதரக்கிறதோ, அந்த நாடுகளுக்கு உலக நிறுவனங்கள் கடன் வழங்குவதை ரத்து செய்து விடும். தீவிரவாதத்தை கண்காணிக்கும் அமைப்புகளில் ஒன்றாக இந்த எப்ஏடிஎப் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.