யாழில் இந்திய ஒப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா!
யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது.இதுதொடர்பிவல் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அலரிமாளிகையில் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் கையெழுத்திட்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களும் கலந்து இதில் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில் இத்திட்டமும் ஒன்றாகும்.
இந்த பூங்கா வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை மேம்படுத்த உதவும்.
இவை தவிரஇ இந்திய அரசினால் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தினை மேம்படுத்தும் முகமாக வடமாகாணத்தில் 46,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மானிய உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அரசின் நிதியுதவியினால் இம் மாகாணத்தில் 1990 இலக்க அவசர நோயாளர் அம்புலன்ஸ் சேவைறும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான யாழ். கலாச்சார மையம் 27 பாடசாலைகளுக்கான கட்டிடங்கள், 3000 மழை நீர் சேகரிப்பு தொகுதிகள் 600 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நாடு முழுவதும் 70 ற்கும் மேற்பட்ட மக்கள நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை