கனவிலிருந்து விழித்திருக்கிறாா் – மாவை!

போரின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை கட்டிகொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.  இப்போதுதான் கேட்கின்றாா் !!
பொருளாதார அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு நிதி அமைச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதன் போது மத்திய வாங்கி ஆளுநர் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதன்போது, 2009 ஆம் ஆண்டு போரின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை கட்டிகொடுக்க வேண்டிய அவசியத்தை மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அவர்களுக்கு வீடுகளை வழங்குவதில் நீண்டகால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாடு திரும்புவதற்கு விரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.