அனிருத்தின் பியானோ இசைக்கு மயங்கும் புலி!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான `கனா' படத்தில் கதை நாயகனாக நடித்தவர் தர்ஷன்.
இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். தவிர, `கலக்கப்போவது யாரு' தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம்,  இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு `தும்பா' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அனிருத் பியோனா வாசிக்க அந்த இசையை புலி ரசித்து கேட்பதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் அதிக வியூஸ்களை கடந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.