ஷமீமா பேகத்தினை பங்களாதேஷ் ஏற்றுக்கொள்ளாது : வெளிவிவகார அமைச்சு!!
ஐஎஸ் மணப்பெண்ணான ஷமீமா பேகம் பங்களாதேஷ் குடியுரிமையைக் கொண்டிருக்காத காரணத்தினால் அவரை பங்களாதேஷ் ஏற்றுக்கொள்ளாது என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐஎஸ் ஜிகாதி அமைப்பில் ஷமீமா பேகம் இணைந்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயான நிலையில் மீளவும் பிரித்தானியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில் அவரது பிரித்தானியக் குடியுரிமை உள்துறையமைச்சினால் நேற்று முன்தினம் இரவு நீக்கப்பட்டது.
தமது நாட்டில் ஒருவர் குடியுரிமைக்குத் தகுதியுடையவர் என்றால் அதுகுறித்து சாத்தியமான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஷமீமா பேகம் பங்களாதேஷ் குடியுரிமைப் பெற்றுள்ளார் என்று கருதியே அவரது பிரித்தானியக் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் இரட்டை குடியுரிமைக்காக ஒருபோதும் விண்ணப்பித்ததில்லை என்றும் தமது நாட்டிற்கு ஒருபோதும் வருகை தந்ததில்லை என்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் தமது நாட்டில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்திற்கு “பூரண சகிப்புத்தன்மை” அணுகுமுறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை