நினைவுகளில் நிறைந்த நீ...!!!
இருண்ட வானத்தின்
நடுவிருந்து வெள்ளிநிலவின்
ஒளி வந்து என்
விழிகளைச்சேர...
இதயத்தின் இருட்டறைகளில்
உறங்கிக்கிடந்த உன்
நினைவுகளும்
தூசுதட்டப்பட...
உனக்கும் எனக்கும்
சாட்சியாக வெண்ணிலா
வந்து கழிந்துபோன
பக்கங்களைத்திருப்ப...
மங்கிய மாலைபொழுதுகளில்
வாழை இலைகளில் விரிசல்களை
அத்துமீறி வந்த நிலவொளியால்
உன் புன்முகமொளிர்ந்திட...
உன் கைகோர்த்து நடந்த வீதிகளும்
நம் கால்தடங்கள் ஏற்ற
அந்த சேராத தண்டவாளங்களும்
மௌனராகம் பாட...
ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவியராய்
இதயமிரண்டும் பயணிக்க
மரணமெனும் பாதாளம்
இடையே வந்துவிட...
பிரித்த வலி தாங்காமல்
பிரிந்த என் இதயம் துடித்திட
உனக்காக ஏங்கிஏங்கி இரத்தநாணங்கள்
அடங்கிப்போக...
காதலை அழித்தாய்
நினைவுகளை அளித்தாயெனும்
உண்மையை உணராமல்
கனவுகளில் வாழ...
ஏங்கிக்கிடக்கும்
என் இதயத்தின் ஓலங்கள்
விழிகளின் ஓரம் செந்நீர்
கண்ணீராய் வழிந்திட...!!!
கவிதை தமிழச்சி!
நடுவிருந்து வெள்ளிநிலவின்
ஒளி வந்து என்
விழிகளைச்சேர...
இதயத்தின் இருட்டறைகளில்
உறங்கிக்கிடந்த உன்
நினைவுகளும்
தூசுதட்டப்பட...
உனக்கும் எனக்கும்
சாட்சியாக வெண்ணிலா
வந்து கழிந்துபோன
பக்கங்களைத்திருப்ப...
மங்கிய மாலைபொழுதுகளில்
வாழை இலைகளில் விரிசல்களை
அத்துமீறி வந்த நிலவொளியால்
உன் புன்முகமொளிர்ந்திட...
உன் கைகோர்த்து நடந்த வீதிகளும்
நம் கால்தடங்கள் ஏற்ற
அந்த சேராத தண்டவாளங்களும்
மௌனராகம் பாட...
ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவியராய்
இதயமிரண்டும் பயணிக்க
மரணமெனும் பாதாளம்
இடையே வந்துவிட...
பிரித்த வலி தாங்காமல்
பிரிந்த என் இதயம் துடித்திட
உனக்காக ஏங்கிஏங்கி இரத்தநாணங்கள்
அடங்கிப்போக...
காதலை அழித்தாய்
நினைவுகளை அளித்தாயெனும்
உண்மையை உணராமல்
கனவுகளில் வாழ...
ஏங்கிக்கிடக்கும்
என் இதயத்தின் ஓலங்கள்
விழிகளின் ஓரம் செந்நீர்
கண்ணீராய் வழிந்திட...!!!
கவிதை தமிழச்சி!
கருத்துகள் இல்லை