ஒரு தலைக் காதல்..!

தயவாளனே.....
தாயவள் எனக்கு கொடுத்த பெண்மையை உனக்கு
தந்திட ஆசை கொள்கிறேன்.


௧னவில் ஈர்விழி வழியே
என் நாணத்தை உடைத்து
இதயத்துக்குள் நுழைந்தவன் நீ
நிஜத்தில் தயங்குவது ஏனோ?

இரகசியமாய்
என் காதலை அறிந்த நீ
நேரில் எப்போது
பதிலளிக்க போகிறாய்?

உன் கள்ளமில்லாக் குணம்
என்னிடம் அடம் பிடிக்கிறது
என் முத்தத்தை களவாட எண்ணி
நீயோ மௌனம் கொள்கிறாய்
நானோ உன் பின்னே அலைகிறேன்

காலங்கள் கரைகின்றன கண்ணா
என் ஏக்கத் தவிப்பை அறிய மாட்டாயோ

நினைவில் நீ மட்டும்
நிரந்தரமாய் வேண்டும்
என் ஆயுள் முழுதும் தொடர

காலம் முழுதும்
என் துணைவனாய்
கணவனாய் நீ வேண்டும்
நீ மட்டுமே வேண்டும்

என் உயிரே
உனக்கானவளாய்
காத்திருக்கிறேன்
ஒருதலைக் காதலுடன்
எனக்குள் வந்துவிடு...!

கம்சபிரியா


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.