வதையில் ஓர் வண்ணாத்தி..!

பருவமடைந்து அழகிய
மங்கையாய் தோன்றினேன்
ஆசை, மோகத்திலும்
காதல், காமத்திலும்
வாழும் உலகமிது
சிக்காமல் இருக்க
நான் மட்டும் என்ன
விதிவிலக்கா......?
சிக்கி விட்டேன்
காதல் எதிர்ப்பு
என்னையும் எதிர்த்தது
விதியின் சதியில்
அறியா ஒருவனுடன்
இருமனம் இணையாத
திருமணம்
முதல் ருசித்து வாழ்ந்தான்
பின் சலித்துப் போனான்
சந்தேகத்தீ மூட்டினான்
சண்டை பற்றி எரிந்தது
மாதுவாய் பிறந்ததற்காய்
அவனது இச்சைக்கும் என்னுடல்
அவனது சர்ச்சைக்கும் என்னுடல்
என் உணர்வுகளை
பூவைப் போல் கசக்கினான்
என் ஆசைகளை
சருகைப் போல் மிதித்தான்
கொடிய வார்த்தைகளால்
குத்தினான்
செத்துவிடு என்று
சிதைத்தான்
சிறகடித்துப் பறந்தவள் நான்
சிறகிழந்து துடித்தேன்
வாழ்வை இழந்த நானும்
வதையில் ஓர் வண்ணாத்தி!
கம்சபிரியா
கருத்துகள் இல்லை