பிரித்தானிய ஊடகவியலாளர் #மேரி_கொல்வின் கொல்லப்பட்டு 7ஆம் நினைவு நாள்!

தமிழீழத்தில் நடத்தது இனப்படுகொலையே என சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு 16/04/2001 இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் தன் கண்ணை இழந்தவர் மேரி கொல்வின். ஐ.நா உட்பட பல வெளியக சக்திகள் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாகவும் மற்றும் வேறு பல ஆதாரங்களுடனும் அறிந்திருந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே இருந்த மிகச் சிலரில் ஒருவர் அவர்.
இதன் வழி அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐ.நா உட்பட பலருக்கு இருந்தது.
சிரியாவில் வைத்து 22/02/2012 அன்று அவர் கொல்லப்பட்டது தொடர்பாக இன்றளவும் ஒரு மர்மம் நீடிக்கிறது. தமிழின அழிப்பை மூடி மறைக்கும் மேற்குலக சதியின் ஒரு பகுதியாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் இலகுவில் புறந்தள்ளிவிடக் கூடியதல்ல.
தொடரும் ஐ.நா - மேற்குலக - பிராந்திய சதிகள் இதை உறுதி செய்கின்றன. அம்மையாரை தொடர்ந்து நினைவு கூர்வதனூடாக இந்த சதிகளை முறியடித்து நீதிக்கான எமது பாதையை வகுத்துக் கொள்வோம்.
கருத்துகள் இல்லை