காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு!


கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இத்தனை வருடங்களாக நாங்கள் தனித்தனியாகவே ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தோம். எனினும் தற்போது பொது அமைப்புக்கள், மக்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் அனைவரிடமும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். காணாமல் போனவர்கள் எங்களுடைய உறவுகள் மட்டும் இல்லை. காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் உறவுகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.