இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!


இலங்கையுடனும், ஓமானுடனும் விமான சேவை ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கு சிம்பாப்வே தீர்மானித்துள்ளது. சிப்பாப்வே அமைச்சரவையினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக African Daily Voice ஊடகம் தெரிவித்துள்ளது. தலைகர் ஹராரேயிலிருந்து உலகம் முழுவதும் இந்த விமான சேவையை மேற்கொள்வதற்கு இலங்கையுடனும், ஓமானுடனும் விமான சேவை ஒப்பந்தங்களை மேற்கொள்ள சிம்பாப்வே திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, ஸ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் ஓமான் விமான சேவை ஆகியவற்றுடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிம்பாப்வே தகவல், ஊடக அமைச்சர் மோனிகா மட்ஸ்வாங்வா, “இந்த ஒப்பந்தங்கள் விமான போக்குவரத்து சேவைகளை செயல்படுத்துவதற்கான ஒரு நிர்வாக கட்டமைப்பை வழங்குகின்றன. மேலும் இதனால் சிம்பாப்வே மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும்” என கூறினார். ஸ்ரீலங்கன் விமான சேவை 27 விமானங்களைக் கொண்டுள்ளதுடன் தற்போது உலகளவில் 114 சேவைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.