கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!


தமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரவிக்கப்படுகிறது. மதுரையில் பா.ஜ.க வின் தேசிய தலைவர் அமித்ஷாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.ஜனதா தொகுதி பட்டியலில் வட.சென்னைக்கு பதில் மதுரை தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு ஆர்.சீனிவாசனை போட்டியிட வைக்க திட்டமிட்டு தொகுதியை மாற்றித் தருமாறு அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.