இந்திய மீனவர்கள் ஐவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!


தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களையும் எதிர் வரும் 8 ஆம் திகதி  வரை விளக்கமறியில் வைக்குமாறு மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இந்தியா பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை இரவு விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்க கடவுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த மீனவர்கள் இலங்கையில் தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் வைத்து கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும்,அவர்கள் பயண்படுத்திய விசைப்படகினையும் கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தாழ்வுபாட்டு கடற்படையினர் குறித்த மீனவர்களை வைத்திய பரிசோதனைக்கு உற்படுத்தி விசாரனைகளின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குறித்த 5 மீனவர்களிடம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் வாக்கு மூலத்தை பதிவு செய்யதனர். இதன் போது தாங்கள் 5 பேரூம் விசைப் படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்டதாகவும்,இதன் போது தமது படகில் இயந்திரக்கோளறு ஏற்பட்ட நிலையில்,தமது படகு இலங்கை கடற்பகுதிக்கு ஒதுங்கிய நிலையிலே தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். வாக்கு மூலத்தை பதிவு செய்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆஜர் படுத்தினர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா குறித்த மீனவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பாம்பன் பகுதியைச் சேர்ந்த கொலம்பஸ்(வயது-40),நீக்கிலாஸ் அடைக்கலம் (வயது-55),பரஞ்சோதி அருள்சகாயம்(வயது-33),ஜேயபால் ஜெயகாந்(வயது-35),மூக்கையா முருகன்(வயது-42) ஆகிய 5 மீனவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.