காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு!


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பதாக வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமையம் கிளிநொச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன், அன்றையநாள் முழுவதும் வடமாகாணம் தழுவிய ஆதரவினை கோரியுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டமானது நியாயமானதும் வலுவானதாகவும் உள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் கோரிக்கைகக்கு அரசாங்கம் உரிய பதிலினையும் இதுவரை வழங்க முன்வராமை பெரும் வேதனையளிக்கின்றது. இச் சூழலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.