கொழும்பில் களைகட்டிய -‘பூசணிக்காய்’ திருவிழா!
இலங்கையின் முதலாவது பூசணிக்காய் திருவிழா கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்றது.
அம்பாறை, மொனராகலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 25 பூசணி விவசாயிகள் இந்த பூசணி திருவிழாவில் பங்கேற்றனர்.
ஐம்பது ஆயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் கிலோ பூசணிக்காய்கள் வரை கொழும்புக்கு கொண்டு வரப்பட்டன.
மேற்படி மாவட்டங்களில் பூசணிக்காய் அபரிமிதமாக விளைந்ததால், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகி, விலை வீழ்ச்சியும் ஏற்பட்டது.
தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் வீதிப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, வாடிக்கையாளர்களிடம் இலவசமாக பூசணிக்காய்களை கொடுக்கவும் முன்வந்தனர்.
விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டதையடுத்தே, மக்கள் மத்தியில் பூசணிக்காய் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பூசணிக்காயின் பல்வேறு பயன்கள் பற்றி எடுத்துச் சொல்லவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருமானம் பெற்றுத்தரவுமே இந்த பூசணித் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளரான சன்ன டி. சில்வா தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை