காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்!
ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கி, தமக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க இடம்கொடுக்க வேண்டாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இம்மாதம் 25ஆம் திகதி, வடக்கு கிழக்கில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக, வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, சங்கத்தின் பேச்சாளர் தேவராசா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில், இலங்கைக்கு ஜெனிவா 2 வருட கால அவகாசம் வழங்கியது.
இந்த இரண்டு வருடத்தில் இலங்கை அரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.
இந்த இரண்டு வருடத்தில் தமது உறவுகளை தேடியே பலர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை