அருந்ததி இயக்குனர் காலமானார்..!

அம்மன், அருந்ததி உள்ளிட்ட படங்களை இயக்கிய, கோடி ராமகிருஷ்ணன் இன்று காலமானார்.



ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் கோடி ராமகிருஷ்ணன். இவர் அம்மன் மற்றும் அருந்ததி படத்தை இயக்கியதன்  மூலம் பிரபலம் அடைந்தவர். தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களையும் இயக்கியுள்ளார்.

கோடி ராமகிருஷ்ணன்சில தினங்களுக்கு முன்னர் நுரையீரல் தொற்று காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி  (22.2.2019) உயிரிழந்தார். இவர் மறைவிற்கு திரை உலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.