காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராமர் கோவில்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், நிச்சயம் ராமர் கோவில் கட்டுவதற்கு தீவிர முயற்சிகளை எடுப்போம், என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கான நேர்மையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும், என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, "இதற்கு முன் இரண்டு முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ராமர் கோவில் கட்டுவதற்கு உண்மையான முயற்சிகள் எடுத்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ராமர் கோவில் கட்டுவதற்கு மறுபடியும் முயற்சிகளை எடுப்போம்" என்று கூறினார்.
இது அவரின் தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் நிலைப்பாடா என்று கேட்டதற்கு, "நான் ராமர் கோவில் பற்றி பேசியது பெரும்பாலான ஊடகங்களில் பரவலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையில் இருந்த அதற்கு மறுப்பு எதுவும் வந்ததில்லை" என்று கூறினார். மேலும், ராமர் கோவிலை வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதாகவும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் கோவில் கட்டுவதற்கு துணை நிற்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை