கிளிநொச்சி போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் உட்பட பலரும் ஆதரவு!
முன்னெடுக்கபடவுள்ள போராட்டத்திற்கு வவுனியாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் தமது ஆதரவைதெரிவித்துள்ளது.
ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூடத்தொடர் ஆரம்பமாகின்றநிலையில் இலங்கைக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்கபடகூடாது என்று தெரிவித்தும், கடத்தபட்டு காணாமல் போனவர்களின் நிலையை தெரியபடுத்தகோரியும் எதிர்வரும் 25 ம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்று மேற்கொள்ளபடவுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக வவுனியா வர்தகர்சங்கம்,வவுனியா உள்ளூர்விளைபொருள் விற்பனையாளர் சங்கம்,வவுனியா மாவட்ட பதிப்பாளர் கூட்டுறவுசங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர்சங்கம்,இலங்கை ஆசிரியர்சங்கம், வவுனியா சிறுவியாபாரிகள் சங்கம் ஆகியன தமது ஆதரவைதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpeg
)





கருத்துகள் இல்லை