அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி!!
அம்பாறையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறவுகளால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.
ஜ.நா.சபையின் 40 ஆவது கூட்டத் தொடர் நாளை கூடவுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்திலாவது மக்களின் கண்ணீருக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என ஜ.நா.சபையிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் கறுப்பு உடையுடன் தலையில் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்புப் பேரணியை நடத்தினர்.
அம்பாறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இப்பேரணி இடம்பெற்றது.
திருக்கோவிலில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளில் சங்க அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகிய இப்பேரணி, வாக்கிரிஷா வீதியூடாக பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரம் வரை சென்றது. அத்துடன் அங்கு அவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் கலந்துகொண்டதோடு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஊடகங்களுக்கு தங்களின் கருத்துக்களை வழங்கியதைத் தொடர்ந்து தங்களது கவனயீரப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நிறைவு செய்து கலைந்து சென்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை