காணி பிணக்குகளை தீா்ப்பதற்கான புதிய முயற்சி!!

வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின்

சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே கௌரவ ஆளுநர் அவர்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம்.

அவர்கள் தமது விபரத்தினை தபால் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அலுவலக முகவரி – காணி நிர்வாக திணைக்களம், வட மாகாணம், 59, கோவில் வீதி,யாழ்ப்பாணம்.

தொலைபேசி இல - 0212220836

இணையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள-
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.