சிறீலங்கா தாமதிக்கும் நாடகத்தை ஆடுகின்றது -நவநீதம்பிள்ளை!!

சிறீலங்காவின் அரசதலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில்

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்காக அமைச்சரவையின் அனுமதியை பெறும் முயற்சியை ஐக்கியநாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை குறித்து மனித உரிமை பேரவை விவாதிக்க உள்ள நிலையில் சிறீலங்கா அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தப்புவதற்காக தாமதிக்கும் நாடகத்தை ஆடுகின்றது.

என நவநீதம் பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்
தென்னாபிரிக்க பாணியில் மறப்போம் மன்னிப்போம் என்ற சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள நவநீதம் பிள்ளை பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறீலங்கா அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதி செய்வதாக உறுதியளித்தது எனினும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு மாத்திரம் அமைச்சரவையின் அனுமதியை பெற முயல்வதன் மூலம் பின்னோக்கி செல்ல முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தென்னாபிரிக்கா உண்மையை தெரிவிப்பது விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லை எனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு உகந்தது என்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை சிறீலங்காவில் இடம்பெற்ற விடயங்களுடன் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார்.

நவநீதம் பிள்ளை இங்கு பாரிய படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு அட்டுழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா பிரதமர் தெரிவிப்பது போன்று தென்னாபிரிக்க மக்கள் வழக்குதாக்கல் செய்யாமலிருக்கவில்லை,கடந்த மாதம் கூட காவல்துறையினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்தவர்கள் காவல்துறைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர் என நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.