கொழும்புத் துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாகிறது!!


18 மாதங்களுள் கொழும்பு துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


இதன்பொருட்டு நவீன தொழில்நுட்ப முறைகள் துறைமுக செயற்பாடுகளிற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியால் இத்திட்டத்திற்கு 929 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பது காலத்தின் தேவையாகும் எனத் தெரிவித்த அமைச்சர், இந்த மாற்றம் மூலமாக ஒன்றிணைந்து கூட்டாக செயற்படும் திறன் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார்.

இத்திட்டத்கின் கீழ் முனையங்களின் தொழில்நுட்ப வசதிகளை அபிவிருத்திச் செய்வதன் ஊடாக முனைய முகாமைத்துவம் மற்றும் சரக்கு கையாளல் உரிய முறையில் நடத்தப்படும். இந்த செயற்பாடுகள் 12-18 மாதங்களுள் நிறைவடையுமென அமைச்சர் தெரிவித்தார்.

முனைய தொழில்நுட்ப அபிவிருத்தியின் கீழ் Gate Automation, Yard Automation, Quay Side Automation, Prime Route DGPS, Business Intelligence Tools, web portals and simulation tools ஆகியன அபிவிருத்திச் செய்யப்படும்.

லேமன்ஸ் கொள்கைக்கமைவாக உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலப்பகுதியில் கொழும்பு துறைமுக முனையம் அதிகளவு கொள்கலன்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வினைத்திறனான முனையமாக செயற்படுமென அமைச்சர் ரத்னாயக்க மேலும்  குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.