டெல்லியில் போர் நினைவுச் சின்னம் மோடியால் திறந்துவைப்பு!!

முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னம் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உயிரிநீத்த வீரர்களுக்காக கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபியே இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

குறித்த போர் நினைவுச் சின்னத்தை விரிவுபடுத்தி, புதுப்பித்து பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே 1962இல் நடந்த போருக்குப் பின் கோரிக்கை எழுந்தது.

எனினும் நீண்டகாலமாக இந்த கோரிக்கை நிலுவையில் இருந்தது. இதையடுத்து கடந்த 1999இல் நடந்த கார்கில் போருக்குப் பின்னர் இக்கோரிக்கை மேலும் வலுப்பெற்றது.

இந்நிலையில், தாம் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் புதுப்பொலிவுடன் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது. அந்தவகையில் இன்று இந்த போர் சினைவுச் சின்னம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாழாவில் உரையாற்றிய பிரதமர், “கடந்த 2014 ஆம் ஆண்டில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் இதற்கான பணிகள் தொடங்கி இன்று நினைவுச் சின்னம் திறக்கப்படுகிறது.

இதை புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.