ஒஸ்கார் மேடையை அற்புதமாக்கிய லேடி காகா!!

'ஒஸ்கார்' விருது வழங்கும் விழாவில், லேடி காகா நெகிழ்ச்சியுடன் பேசிய அற்புத தருணத்தின் வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 91-வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் 'ஆஸ்கர் விருது' வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. 'எ ஸ்டார் இஸ் பார்ன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஷாலோ’ என்னும் பாடலுக்காகப் பிரபல பாப் பாடகி லேடி காகா மற்றும் குழு, சிறந்த பாடலுக்கான விருதை தட்டிச்சென்றது. விருதைப் பெற்ற லேடி காகா, நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார். அவரின் உத்வேக பேச்சுக்கு ஆஸ்கர் அரங்கம் அதிரும் அளவுக்கு கைதட்டல்கள் கிடைத்தன. லேடி காகா-வின் உரையைப் பார்ப்பதற்கு முன் ஆஸ்கர் விழாவில் நடந்த மற்றொரு ஸ்வாரஸ்ய சம்பவம் குறித்துப் பகிர்கிறோம்.

பிராட்லி கூப்பர் இயக்கி, நடித்த 'எ ஸ்டார் இஸ் பார்ன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஷாலோ’ என்னும் பாடலுக்குதான் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான (Best original song) ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் மேடையில் பிராட்லி கூப்பர் உடன் இணைந்து, லேடி காகா ஷாலோ பாடலை உணர்ச்சிபொங்கப் பாடி அசத்தினார். பிராட்லி - காகா இடையே அப்படியொரு கெமிஸ்ட்ரி. பாடலைப் பாடிக்கொண்டே ஒருவரோடொருவர் கண்களால் பேசிக்கொண்டது, அங்கிருந்தவர்கள் மத்தியில் ஷாலோ பாடலின் உணர்ச்சிகளைக் கடத்தியது. லேடி காகா – பிராட்லி இடையே காதலா, ஹாலிவுட் வட்டாரத்தில் இன்றைய ஹாட் டாபிக் இதுதான். சரி, இப்போது லேடி காகா-வின் ஆஸ்கர் உரைக்கு வருவோம்.

லேடி காகா உரையின் தமிழாக்கம்...

’’என் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். இது என் கடினமான உழைப்பால் மட்டுமே சாத்தியமானது. நான் மிக நீண்ட காலமாகக் கடினமாக உழைத்தேன். ஜெயிப்பது விஷயமில்லை. பின்வாங்காமல் இருப்பதுதான் முக்கியம். நீங்கள் ஒரு கனவு கான்கிறீர்கள் என்றால், அதற்காகப் போராடுங்கள். உங்கள் லட்சியத்தை அடையும் வரை போராடுங்கள். எத்தனை தடவை தோற்கடிக்கப்படுகிறீகள், விழுகிறீர்கள், தாழ்த்தப்படுகிறீகள் என்பது எல்லாம் முக்கியம் கிடையாது. எத்தனை தடவை மீண்டெழுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

எத்தனை தடவை துயர்களைத் துடைத்து, தடைகளைத் தகர்த்து, தன்னம்பிக்கையுடம் மீண்டெழுகிறீர்கள் என்பது மட்டுமே முக்கியம். கடின உழைப்பும் விடா முயற்சியும் மட்டும் போதும். இது என் முதல் ஆஸ்கர் விருது. என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இது என் உழைப்புக்குக் கிடைத்த மரியாதை’’ என்று கண்களில் நீர் ததும்ப உரையை முடித்தார்.
பத்து ஆண்டுகளாக இசை, பாடல் எனச் சுழன்றுகொண்டிருக்கும் லேடி காகாவுக்கு, இந்த ஆஸ்கர் மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைப் பட்டியலில் இருந்தாலும், பாடலுக்காக ஆஸ்கர் பெறுவது இதுவே முதல்முறை. உலகம் முழுவதும் ட்ரெண்டாகிவரும் ஷோலோ பாடல், காகா, மார்க் ரோன்சன், ஆண்டனி, ஆண்ட்ரூ ஆகியோர் இணைந்து எழுதியது. காகா – பிராட்லி இணைந்து பாடியது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.