இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கப்படவேண்டி வாகன ஊர்திபோராட்டம்.!!


இன்று தேசிய உழைக்கும் மீனவர் அமைப்ப்பினர் வடக்கு.கிழக்கு பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காக வாகன ஊர்திபோராட்டம்.



இராணுவத்தால் கைவசப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு  கேப்பாப்புலவு நிலமீட்பமக்களின் போராட்ட இடத்திலிருந்து இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து முல்லைத்தீவு  அரசாங்க அதிபர் செயலகம் சென்று மகஜர் கையளித்து அதன்பின்  புதுக்குடியிருப்பு ஊடாக கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவணயீர்ப்பு போராட்ட இடத்திற்கு சென்று  அதன் பின் யாழ்ப்பாணம் சென்று பின்னர் வவுனியா ஊடாக அம்பாறை சென்று இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி பின் கொழும்பில்உள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தலமையகத்திற்கு சென்று விடுபடாத அனைத்து தமிழ் மக்களின் காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்ற மகஜரும் கையளிப்பதற்கான வாகன ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.