தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி துடுப்பாட்ட போட்டிக்கான விருதுகள் வழங்கி வைப்பு!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட  விளையாட்டுத்துறையின் அனுசரணையில் ஜெயந்தி நகர் இந்துஇளைஞர் விளையாட்டுக்கழகத்தால்  நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்டச்சமர் கிளி/இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில்   இடம்பெற்றது ஐந்து தினங்களாக இடம்பெற்ற மேற்படி துடுப்பாட்டச்சமரில்
வடமாகாணத்தைச்சேர்ந்த 60அணிகள் பங்குபற்றியது.இறுதிப்போட்டியில் கிளி இந்து இளைஞர் மற்றும் யாழ் பாபா அணிகள் மோதியதில் யாழ் பாபா அணிவெற்றி பெற்று சம்பியனாகியது.
மேற்படி துடுப்பாட்டச்சமரின் இறுதிப்போட்டிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயாளர் திரு.செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான ஜெகதீஸ்வரன்(ஜெகா) மற்றும் இலங்கைச்செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சி   கிளைத்தலைவரும் சமாதான நீதவானுமான திரு.சந்திரசேகரம், கிளி/இந்து ஆரம்ப பாடசாலை அதிபர், ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை அதிபர், முன்னணியின் ஜெயந்திநகர் வட்டாரச்செயற்பாட்டாளர் திரு.ரஜனிகாந் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசு என்பவற்றை வழங்கினார்கள்.
சம்பியன் அணிக்கு 25000ரூபா பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் இரண்டாம் இடத்தைப்பெற்ற அணிக்கு 15000ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன் ஆட்டநாயகன் தொடர் ஆட்டநாயகன் விருதுகளும் வழங்கப்பட்டது.

மேற்படி துடுப்பாட்ட போட்டிக்கான ஒழுங்குபடுத்தலை கிளிநொச்சி உதவி அமைப்பாளர் திரு.விமலாதரன் மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.