சிலந்திப் போராட்டமாகும் கேப்பாப்பிலவு!!

(செய்தியாளர் த.செல்வா)
எந்த அரசியலையும் சாராத ஒரு மக்கள் அரசியலுக்காக மக்களே களத்தில் இறங்கியுள்ளனர்

கேப்பாப்பிலவு மக்கள் அவலம் நிறைந்த ஊர்மனை தோறும் நடந்து கொழும்புவரை செல்வதற்காய் நடக்கத் தொடங்கியுள்ளனர்

யாரும் ஒத்துளைப்புக் கொடுக்காவிட்டாலும் கூட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் நடைப் போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியதைப் போல் ஏற்படுத்தி விடாதீர்கள்

ஏனெனில் இனி நீங்கள் விளம்பரத்திற்கும் பிரபல்யத்துக்கும் என்னதான் கூத்தாடினாலும் எல்லா வழிமுறைகளும் தோல்விப் பொறிமுறைகளாகவே மாறப் போகின்றது

படிப்படியாக யாவையும் மாறுவதற்கான அறிகுறியாக மக்கள் புரட்சி ஒன்று வெடிப்பதற்கான களம் கருவிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளது

ஸ்கொட்லாந்தை எதிரிகளிடம் பறிகொடுத்த மன்னர் புறூஸ் காட்டின் குகையொன்றில் மறைந்திருந்த பொழுது

 விழுந்து விழுந்து ஆறாவதுதரம் தனது இலக்கை அடைந்து கூடுகட்டிய சிலந்தியைப் பார்த்தாராம் அவன் உடலில் புது ரத்தம் ஏறியது மனதிலும் தான் யு ஆ குட் ரீச்சர் என சிலந்தியைப் பார்த்துச்  சொன்னானாம் ஒரு சிலந்தியின் முயற்சி ஏன் இந்த அரச மூளைக்குள் வராமல் போனது இந்தச் சிலந்தியால் முடிந்தது ஏனிந்த புறூசால் முடியவில்லை சிந்தித்தான் புறூசின் நாட்டைக் கைப்பற்றியவர்கள் புறூஸ் இறந்ததாகக் கனவுகண்டனர்

புறூஸ் ஊர்களுக்குள் நுளைந்தான் ஊரெல்லாம் நடந்தான் ஒவ்வொரு மனிதனாகப் பேசினான் அனைவரிடமும் நம்பிக்கை ரத்தம் பாய்ச்சினான்

எதிரிகள் எதிர்பிராத நேரம் எதிர்பாராத இடத்தில் உச்சி அடி அடித்தான் மீண்டும் ஸ்கொட்லாந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்

இந்தச் சிலந்திப் போராட்டத்துக்குத் தயாராகி விட்டனர் கேப்பாப்புலவு மக்கள் அங்கே ஒரு புறூஸ் இங்கே பல நூறு புறூஸ் இவர்களும் ஓர் நாளில் ஈழத்தைத் தமதாக்குவர் அதற்கான முதல்ப்படி கேப்பாப்பிலவு

'சிலந்திச்சோதியில் சுடரானது
கேப்பாப் பிலவு
வீழ்த்தப்பட்ட ஒரு ஸ்கொட்லாந் போலவும்
காணாமல் ஆக்கப்பட்ட மன்னர் புறூஸ் போலவும்

எனினும்
சிலந்தியில் ஊறியது நம்பிக்கை ரத்தம்
நாளை தமர்கூடி தமதாகும் ஈழமென
கேப்பாப்பிலவில் சனித்தது
சனங்களின் நடை

இனி ஊர்கூடி நம்பிக்கை ஏற்றுவோம்
நாளை சிரசங்கள்
அரச சிரசங்கள் வீழ்தல் காண்பீர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.