ஜனாதிபதி முஹம்மட் புஹாரி நைஜீரிய தேர்தலில் முன்னிலை!!
நைஜீரிய தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகளில் ஜனாதிபதி முஹம்மட் புஹாரி முன்னிலை வகிப்பதால் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின் பிரகாரம் நைஜீரியாவின் 36 மாநிலங்களில், புஹாரி 7 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார் , அவருக்கு போட்டியாக விளங்கிய அட்டிகு அபூபக்கர் தலைநகர் அபுஜாவிலும் மேலும் 2 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
எனினும் முடிவுகள் தவறாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாக இருக்கிறது என புஹாரியின் பிரதான போட்டியாளர் அட்டிகு அபூபக்கர் குற்றம் சுமத்தியுள்ளார்.
76 வயதான புஹாரி, அரசியல் அரங்கில் இரண்டாவது வாய்ப்பைத் தேடும் ஒரு முன்னாள் இராணுவ ஆட்சியாளராவார். அதே நேரத்தில் 72 வயதான அட்டிகு, தொழிலதிபரும் முன்னாள் துணைத் தலைவருமாவர். இவர் எண்ணெய் வள நாடான நைஜீரியாவில் தனியார் துறையினரின் பங்கை விரிவாக்க உறுதியளித்துள்ளார்.
நைஜீரிய ஜனாதிபதி தேர்தல், சர்வதேச அரங்களில் பல நாடுகளாலும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை