சிங்கள அரச கடும்போக்குவாதிகளே பாகிஸ்தானிடம் ஆலோசனை பெறுங்கள்!!
சிங்கள ஆட்சியாளர்களே...! பாகிஸ்தான் உங்கள் நட்பு நாடு. தமிழ் மக்கள் மீதான படுகொலைக்கு பாகிஸ்தான் அள்ளித் தந்த ஆயுதங்களுக்கான கணக்கை இதுவரை முடித்தீர்களோ தெரியாது. அது போகட்டும். உங்கள் வியாபாரம்.
பாகிஸ்தானின் மனிதாபிமானத்தை கொஞ்சம் பாருங்கள். ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக குண்டுகளைக் காவிச் சென்று தமது நாட்டில் போட்டு சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்திய விமானப்படையின் ஒரு விமானியை சிறைப்பிடித்தார்கள்.
இரு நாள்கள் கூட ஆகவில்லை. விடுதலைக்கு உத்தரவாதம் அளித்து நாளை விடுவிக்கவுள்ளனர்.
ஆனால், நீங்கள் எந்தக் காரணமும் இன்றி, போலி வழக்குகளைப் புனைந்து, பத்தாண்டுகளுக்கும் மேலாக எமது நூற்றுக்கணக்கான இளைஞர்களைச் சிறையில் அடைத்துள்ளீர்கள்.
போர்க் கைதிகளாகச் சிறைப்பிடித்துள்ள இவர்களை விடுவிக்க உங்கள் மனம் இதுவரை இடமளிக்கவில்லை. இவர்களில் பலர் வழக்கு விசாரணைகள் இன்றி, ஏன் கைது செய்யப்பட்டோம் என்றே தெரியாமல் இருக்கின்றனர்.
அபிநந்தன் அப்படி அல்ல. உண்மையில் அவர் ஒரு போர்க்கைதி. இந்தியாவின் போர் விமானத்தை இயக்கிய விமானப் படை வீரர். அவரையே இரு நாள்களுக்குள் விடுவிக்க அணு வல்லமை படைத்த அந்த நாடு முடிவெடுத்திருக்கின்றது.
ஆனால், தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எமது நூற்றுக்கணக்கான இளைஞர்களை போர்க் கைதிகளாக வைத்திருக்கின்றீர்கள். உங்கள் மனிதாபிமானத்தை நாம் எப்படி மதிப்பிடுவது.
இதுபோக, இந்திய – பாகிஸ்தான் அமைதியாக இருக்கவேண்டும் என அறிக்கை வேறு விடுகின்றீர்கள். இதுதான் உங்கள் தேசத்திற்கு கௌதம புத்தர் போதித்த போதனையா?

கருத்துகள் இல்லை