வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பிற்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

(-ஜெரா தம்பி-)
பொதுவாக வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பிற்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இம்மாவட்டத்தில் இருக்கும் சில கிராமங்கள் ஆபத்தான நிலையைக் கூட எட்டியிருக்கின்றன. அனுராதபுரத்திற்கு அடுத்த நிலையில் வவுனியா இருக்கின்றது என எச்சரிக்கைப்படுத்தும் தகவல்களும் வந்திருக்கின்றன.


இதற்குப் பிரதான காரணம் குடிநீரில் கல்சியம் அதிகரித்திருக்கின்றமை, குடிநீரில் பாரஉலோகங்கள் அதிகரித்திருக்கின்றமை சொல்லப்படுகின்றது. எனவே மக்கள் அருந்தவேண்டிய சுகாதாரமா நீரை வழங்கவேண்டிய பொறுப்பு இம்மாவட்டத்தை நிர்வாகம் செய்யும் அனைத்துத் தரப்பினருக்குமே உண்டு. எல்லோராலும் பணத்திற்கு குடிநீரை வாங்கக்கூடிய நிலை இல்லை. எனவே பிரதேச சபைகள் கிராமத்திற்கு ஒரு நீர் சுத்திகரிப்பு மையத்தையாவது நிறுவ வேண்டும். பரிசோதித்து, அருந்தக்கூடிய நீர் என அடையாளப்படுத்தப்பட்ட கிணறுகளிலிருந்தோ, நீர் வழங்கல் சேவையிடமிருந்தோ நீரைப் பெற்று அதனை வடிகட்டி மக்களுக்கு வழங்க முடியும்.

பிரதேச சபைகள் தங்களிடம் இதற்கெல்லாம் நிதியில்லை என இலகுவாகப் பதில் சொல்லக்கூடும். நம் மக்களைக் காப்பாற்றவேண்டும் எனமுடிவெடுத்தால் அரசின் நிதியைத்தான் நம்பிக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. தன்னார்வலர்கள் இருக்கின்றனர். இளைஞர்கள் இருக்கின்றனர். எனவே நம் மக்களை நோக்கி வரும் பேராபத்தைத் தடுக்க ஏதாவது ஒரு காரியத்தில் இறங்குவது நல்லது. இதுமாதிரியான நோய்களில் சிக்கி, நம் இறப்புவீதம் அதிகரிப்பதும் ஒருவகையில் இனஅழிவே என்பதை விளங்கிக்கொள்வோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.