இந்திய ஈழ நாலடியார்..!


சாவினைக் கண்டு சிரிப்பவரல்ல நாம்
சாவது யாராகினும் அழுகையாதலால்
பாடுவோம் உரத்து பாரதத்தின் கொடு
வெண்ணமே வேதைனையானதேனோ

சர்வதேச விதிமுறை பாடுகிறாய் பாலச்சந்திரர்களில்விதிமுறை மறந்ததேனோ பொதுவெளியில் மானபங்கப்படுகிறாய் இசைப்பிரியாவை

மானபங்கப் படுத்தியதேனோ துயிலுரித்த துச்சாதன சிந்தனை இன்றும் ஒரு தமிழனை அவலப்படுத்தியது ஈழத்தையாளும் மனநிலை இன்றும் ஒரு தமிழனைத்

தின்றது முதலாளித்துவத்தை விரும்பும் மக்காள் அழிவது நீயல்லோ தமிழை தரக்குறைவாய் மறந்த மக்காள் அகப்பட்டதொரு தமிழனல்லவோ

அவனும் கிந்தி படித்தானோ சமஸ்கிருதங் குடித்தானோ முந்தைய முதலாளித்துவத்தின் வாலைத்தான் பிடித்தானோ ஆக்கிரமிப்பு மனநிலையில் சென்றது பிழைதான்

சிந்திய குருதி ஈழத்தின் பாவம் பாவத்தின் சம்பளம் மரணமென்பது அந்தக் கர்த்தனுரைத்தது அந்த வீரனின் இல்லை! ஆக்கிரமிப்பாளனின் பாதிச் சம்பளங்

கிடைத்தது மீதிச் சம்பளங் கொடுக்க முன்னர் பாரதத் தமிழா சிந்தி இந்திய நாடா கிந்திய நாடா சீனனும் பாகிஸ்தானும் அமெரிக்கனும் புன்னகைக்க மறுபடியும் சென்னியில்

செந்நீர். செந்நீரென்பது ஆறாய்ப் போனால் அப்பாவி மக்காள் மண்ணாய்ப் போவீர் பாகிஸ்தான் கொடுத்த பீரங்கி யாவும் பிம்பமாய் வந்தெம் நினைவை விழுங்க

மீண்டும் போரில் புல்லமை விழித்தால் அழிவது வென்னவோ பாரதமல்ல கூடவே யீழமும் தமிழக சனங்களும் ஏனெனில் போரில் போரே வெல்லும் வேறுயாரிலார்.

(-த.செல்வா-)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.