காலிமுகத்திடலில் சம்பந்தனும், கிளிநொச்சியில் விக்கினேஸ்வரனும்!!

இலங்கையின் 71வது சுதந்திரதினம் இன்று 04.02.2019 இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலமையில் கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் தேசிய தலைவர் என மார்தட்டிக்கொள்ளும் சம்பந்தன் அவர்கள் இன்றையதினம் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்.

வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மக்கள் இவ் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகவே அனுஸ்டிகின்றனர்.இந் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் சுதந்திர தினத்திற்கு எதிராகவும் நிலமீட்பு,காணாமல்போனோர்,அரசியல் கைதிகள்விடுதலை போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர். இவ் போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர்  கலந்து கொண்டு சுதந்திர தினத்திற்கான தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஒரு புறத்தில் சுதந்திர தின கொண்டாட்ட களிப்பில் கூட்டமைப்பின் தலைவர் மறுபுறத்தில் மக்களுடன் மக்களாக முன்னாள் முதல்வர். இவர்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் யார்? தமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடப்போவதுயார்? என மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

தமிழரசுக்கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடித்தமைக்காக அன்று உயிரை விட்டனர் சிலர் இன்று அதே தலைவர்கள் சுதந்திர தின கொண்டாட்டதில் முக்கிய விருந்தினராக உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.