எமது போராட்டம் தொடரும் - கேப்பாபுலவு மக்கள்!

எமது காணிகள் எமக்கு கிடைக்கும் வரைக்கும் எமது போராட்டம் தொடரும் என்கின்றனர் கேப்பாபுலவு மக்கள்.


  சிறீலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வரும் கேப்பாபுலவு மக்கள் எமக்கான சுதந்திரம் கிடைக்கும் வரை சிறீலங்காவின் சுதந்திர தினம் கறுப்பு தினம்தான் எனவும் எமது காணிகள் விடுவிக்கப்படும் வரை எமது போராட்டங்கள் மேலும் வலுவடையும் எனவும் தெரிவித்தார்கள்.

   மேலும் போராட்டத்தில் பங்குகொண்டுள்ள உலகத்தமிழர் மாணவர் ஒன்றியத்தினைச் சேர்ந்த திரு கந்தசாமி ராகுலன் அவர்கள் எமது மக்களின்  காணிகள்  விடுவிக்கப்படும் வரையும் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் வரையும் எமது மக்களுக்கான எமது போராட்ட பங்களிப்பு  இடம்பெறும் என தெரிவித்தார்.....

No comments

Powered by Blogger.