கட்டிய கோவணமும் கழன்று அம்மணமாக நிற்கும் நிலைமையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது!

கட்டிய கோவணமும் கழன்று அம்மணமாக நிற்கும் நிலைமையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது : அருட்தந்தை ரெக்ஸ் சௌந்தரா விமர்சனம்


தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக மோசமாக மக்களை ஏமாற்றிவருகின்றது என்றும் தமிழ் மக்கள் இனிமேலும் கூட்டமைப்பை நம்புவதற்கு தயாராக இல்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ள சாவகச்சேரி புனித லிகோரியர் ஆலய அருட் தந்தை ரெக்ஸ் சௌந்தரா தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளினால் இன்று கட்டிய கோவணமும் கழன்று தமிழ் மக்கள் அம்மணமாக நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு நேருக்கு நேராக குற்றம் சாட்டினார்.
சாவகச்சேரியில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ” கற்றோர் கருத்தறிதலும் மூத்தோர் மூதுரையும் ” என்ற கருதரங்கில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாதங்களுக்கு தமிழ் தேசிய பேச்சாளர் சுமந்திரன் பதில் வகையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருட் தந்தை ரெக்ஸ் சௌந்தரா உரையாற்றியபோது கருத்தரங்கில் கலந்துகொண்ட மக்கள் அடிக்கடி கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


No comments

Powered by Blogger.