குளோபல் சிட்டிசன் விருதை தட்டிச்சென்ற மனித உரிமைகள் பாதுகாவலர்!

“ஒரு காயம் அனைவருக்கும் காயம்” என்ற மனிதநேய சேவையை பாராட்டி மனித உரிமைகள் பாதுகாவலர் செரில் ஸ்டென்னிச்சிக்கிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


ரெஜினா சர்வதேச கூட்டுறவு சபையினால், 2019 ஆம் ஆண்டுக்கான குளோபல் சிட்டிசன் விருதுகள் வழங்கும் நிகழ்வில், வழங்கப்பட்ட மூன்று விருதுகளில் ஒன்றை அவர் தட்டிச் சென்றுள்ளார்.

இவர் தொழிலாளிகளுக்கும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்காகன சட்டத்தரணியாக தசாப்த காலமாக சேவையாற்றியுள்ளார்.

அத்தோடு, ஸ்டேட்னிச்சக் CUPE சாஸ்கெட்ச்வானுக்கு ஒரு ஆராய்ச்சியாளராகவும், கடந்த 15 ஆண்டுகளில் உலகளாவிய நீதி குழுவிற்கான ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகிக்கின்றார்.

மேலும் நிக்காராகுவா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் பெண்களுடன் இணைந்து பணியாறும் அவர், அங்கு பெண்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றினை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ‘ஒரு காயம் அனைவருக்கும் காயம்’ என்பதற்காக 2019 ஆம் ஆண்டுக்கான குளோபல் சிட்டிசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
#Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.