கனேடிய குடியுரிமையை பெறுவதற்காக ஆங்கில மொழியை கற்கும் சிரிய அகதிகள்

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கனடாவின் – பிரிட்டிஷ் கொலம்பியா, சர்ரே பகுதிக்கு தஞ்சம் கோரி வந்திறங்கிய சிரிய குடும்பம் ஒன்று அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்காக ஆங்கில மொழியை கற்று வருகின்றது.


ஃபாட்டொம் இப்ராஹிம் (36 வயது) என்பவரின் தலைமையிலான 7 பேர் கொண்ட குடும்பத்தினர் தமது ஆங்கில மொழியறிவை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதமளவில் கனடாவிற்கு வந்திறங்கிய சிரிய குடும்பத்தினர், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கையொப்பத்துடனான அகதிகள் ஏற்பு பூர்வாங்க வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உள்வாங்கப்பட்டனர்.

இந்த நிலையில், அந்த குடும்பத்தலைவி ஆங்கில மொழியில் ஒரு சொல்லையேனும் பேச முடியாத நிலையிலும், தனது தாய்மொழியான அரேபிய மொழியை மாத்திரம் எழுத மற்றும் பேசக் கூடியவராக இருந்துள்ளார்.

வாரத்திற்கு நான்கு நாட்கள் மொழி வகுப்புகளுக்கு சென்ற போதும், கனேடிய குடியுரிமைக்கான ஆங்கில மொழி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கருதப்படுகிறது.

இப்ராஹிமின் மனைவி, மனைவியின் தாய், தந்தை, பாட்டி மற்றும் அவரின் இரண்டு பாடசாலை வயது சகோதரர்கள் ஆகியோர் இந்த வருடம் கனடா குடியுரிமையை பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, கடவுச்சீட்டு இன்மை காரணமாக அவர்களின் மேலும் 6 சகோதரர்கள் துருக்கி நோக்கி திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.