இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடம் முடிந்தது.!

(செய்தியாளர் வேதியன்)
வெள்ளைக்காரன் அரசில் தமிழன் ஆளுமையுடன் உயர்பதவிகள் வகித்தபோதும் சிங்களவன் கையில ஏன் பிரிட்டிஸ்காரன் நாட்டைக் கொடுத்தான் என்று தெரியலை.தமிழன் சிங்ள முஸ்லிம் கலவரத்தில் சிங்களவனைக் காப்பாற்றியும் பேரம் பேசும் இனமாக இருந்தும் அவன் ஏன் அழிக்கப்பட்டான்.

வல்லரசெல்லாம் சேர்ந்து ஏன் முள்ளிவாய்க்கால் அவலத்தை நிறைவேற்றியது.

ஆக உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை ஆனால் தமிழனின் இருப்பை சிங்கள நாடே அழித்துக் கொண்டிருப்பது ஏன்.

யார் சுதந்திரம் பெற்றார்கள் யார் கொடுத்தார்கள்.

தமிழன் எப்போ சுதந்திரம் பெற்றான் அவன் அதை கொண்டாடுவதற்கு.

சுதந்திரமாய் இருந்தோம் ஓர் முப்பது வருடம் அப்போ எமக்கான தனித்தேசம் இருந்தது அதில் எல்லா கொண்டாட்டத்தையும் கொண்டாடினோம்.

2009 பின் அனைத்து சுதந்திரமும் பறிக்கப்ட்டது. திறந்தவெளி சிறைகளிலே எம்மினம் இருக்கிறது.

சிறையில் இருப்பவர்களுக்கு ஏது சுதந்திரம் மீட்சி பெறும் வரை. எமக்கேது சுதந்திரம்.

அடுத்தவன்  கொடியும் சுதந்திரமும் எமதல்ல

இதெல்லாம் எப்போ எமக்கு கிடைக்கின்றதோ அந்நாளே எங்கள் திருநாள் அதுவரை இல்லை பெருநாள்.

பெப்ரவரியும்,யூலையும்,மேயும் எம் இரத்த ஆற்றை ஓடவைத்த மாதங்கள்.அவ்வளவு இலகுவில் மறந்திடமாட்டோம்.

நாளை எமக்கு இருண்டநாளே..

No comments

Powered by Blogger.