ராகுல் காந்தியை வம்பிழுத்த 'ரீல்' மன்மோகன் சிங்!!
பிரதமர் மோடிக்கும் சல்யூட் அடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அனுபம் கேர்.
ராகுல் அனுபம்
சரியாக சொன்னீர்கள்
மோடி ஆதரவாளர்கள்
விமானப்படை தாக்குதல்
பாஜக மனைவி
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையை சேர்ந்த 12 மிராஜ் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதல் தீவிரவாத முகாம்களை குறி வைத்து நடத்தப்பட்டது. இந்த செயலை பார்த்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் என்று அனைவரும் இந்திய விமானப்படையை பாராட்டியுள்ளனர்.
ராகுல் அனுபம்
இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்தார். அதை பார்த்த பாலிவுட் நடிகர் அனுபம் கேரோ, பிரதமர் நரேந்திர மோடிக்கும் சல்யூட் வைக்கத் துவங்க நல்ல நாள் இன்று என்று பதில் அளித்துள்ளார்.
மோடி ஆதரவாளர்கள்
அனுபம் கேரின் ட்வீட்டை பார்த்த மோடி ஆதரவாளர்களோ சரியாக சொன்னீங்க சார் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை வீரர்கள் தான் மோடி அல்ல. அப்படி இருக்கும் போது அவருக்கு எதற்காக சல்யூட் வைக்கணும் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனுபம் கேரின் மனைவி கிரண் கேர் பாஜக எம்.பி. ஆவார். மனைவி பாஜாகவில் இருப்பதால் தான் அனுபம் கேர் காங்கிரஸுக்கு எதிராக பேசுகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தில் மன்மோகன் சிங்காக நடித்தார் அனுபம் கேர் என்பது குறிப்பிடத்தக்கது.




MY INDIA


.jpeg
)





கருத்துகள் இல்லை