இந்தியா-பாகிஸ்தானுக்கு கூறப்படும் போர்தர்மம் ஈழத்துக்கு பொருந்தாதா?-ஐ நா முன்றலில் விரல் நீட்டும் கஜன்!!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் ஜெனிவா முன்றலில் தமிழினப்படுகொலை சாட்சியங்களை வைத்து ஏழாவது ஆண்டாகவும் சர்வதேசத்திடம் நீதி கோரிப்போராடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன்
விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலை மேற்கோள் காட்டி அதன் நியாயத்தன்மையை தன் நாட்டு பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் அதையொட்டி தெரிவித்த கருத்தில்
ஐநா முன்றலில் நின்று கொண்டிருக்கின்றேன்.இந்த ஐநா தான் உலக நாடுகளுக்கென யாப்புக்களையும் சாசனங்களையும் எழுதிவைத்துள்ளது.போரில் கைதிகளை எவ்வாறு நடத்தவேண்டுமெனவும் எழுதி வைத்துள்ளது.இந்த சாசனத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் சிறைப்பிடித்த தனது விமானியை விடுவிக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தியது.அந்த சாசனத்தின் அடிப்படையில் பாகிஸ்த்தான் பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கமும் தாமதமின்றி கௌரவமாக தாம் சிறைப்பிடித்த விமானியை விடுவிக்கின்றது.ஆனால் பாகிஸ்தானா இந்தியாவா என்று ஈழத்தமிழர்களிடம் கேட்டால் நாம் இந்தியா என்றுதான் சொல்வோம் ஏனெனில் இந்தியா பண்பாட்டு விழுமியத் தொடர்பிலும் நிலத்தாலும் தமிழக உறவுகளாலும் நெருங்கியது.ஆனால் அதற்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தான் எமது இயக்கத்தின் தற்கொலைத்தாக்குதல்களின் நியாயத்தன்மையை ஏன் அது உருவானது என்பதை விளங்கிக்கொண்டு அதுவும் அந்த நாட்டின் தலைவர் அதை பேசியிருக்கின்றால் என்றால் அவரை வாழ்த்தியே ஆகவேண்டும்.
தனது விமானியை பாகிஸ்தான் சிறைப்படுத்தியபோது இந்தியா பேசுகின்ற போர் தர்மம் ஐநா சாசனம் எல்லாம் ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்படுகின்றபோது எங்கே போனது.போரில் சிறீலங்கா படைகளால் கண்கண்ட சாட்சியங்கள் இருக்க பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் போராளிகள் பெண்போராளிகள் இன்று பத்து ஆண்டுகளாகியும் எங்கே அவர்கள் என்ற பதிலை சிறீலங்கா அரசு சொல்லவில்லை.அவர்களை விடுவிக்கவும் இல்லை காட்டவும் இல்லை.ஐநா சாசனத்தை சிறீலங்காப் படைகள் மீறிய போர் தர்மம் ஏன் இந்தியாவுக்கு கண்ணுக்கு தெரியாமல் போனது ஏன் இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் சிறீலங்கா படைகள் மீறிய போர் தர்ம மீறலை ஐநாவில் வெளிப்படையாக பேசவில்லை.தன் நாட்டிலேனும் ஒரு அறிக்கையை விடவில்லை.ஒரே ஒரு இந்திய விமானிக்காக பெரிதாக பேசப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் நிர்வாணமாக்கப்பட்ட அவமதிக்கப்பட்டபோதும் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு சிறீலங்கா படைகளால் கூட்டு பாலியல்வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு உயிரோடு சுட்டுக்கொல்லப்பட்டபோதும் ஐநா சபையும் கண்ணை மூடிக்கொண்டிருந்தது.கொடுரங்கள் நடந்தபோது முதுகைக்காட்டிக்கொண்டு ஐநா அதிகாரிகள் ஈழத்தை வெளியேறி சிறீலங்காப்படையின் இனஅழிப்புக்கு ஒத்துழைத்தனர்.வல்லரசுகளுக்கு மட்டும் ஆடும் ஐநாவின் கட்டமைப்பு எப்பொழுது மாறுகின்றதோ அன்றுதான் விடுதலைக்காக போராடும் இனங்களுக்கு விடுதலை கிடைக்கும்.காலம் சென்றாலும் தமக்கு தமக்கு என்று வலி வருகின்றபோது கரும்புலிகளின் நியாயத்தை இம்ரான்கான் பேசியதைப்போல வேறு பலரும் பேசவேண்டிய காலம் பிறக்கும்.
இப்பொழுது கூட பத்தாண்டுகளாக ஈழத்தமிழினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி போராடுகின்றது.இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருகின்றது.ஆனால் இந்த விடயத்தில் இந்தியா ஆழமான கரிசனை கொள்ளவில்லை.இம்ரான்கானின் முன்னுதாரணத்தில் இருந்து இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமது ராஜதந்திர கொள்கைகளை மாற்றியமைக்கவேண்டும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் மேலும் பல கருத்துக்கள் உள்ளடங்கலாக தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை